ஜிப்மர் மருத்துவமனையில் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சான்றிதழ் படிப்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. பாடப்பிரிவுகள், கல்வித்தகுதி, வயது, மொத்த இருக்கைகள், பாடத்தின் காலம் விவரம் வருமாறு:- 

அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்:- கல்வித்தகுதி- பிளஸ்-2 (அறிவியல்/எம்.எல்.டி./ நர்சிங்), வயது 17-25, மொத்த இடங்கள் - 20, பாடத்தின் காலம் ஒரு ஆண்டு. மேலும் ஒரு ஆண்டு விருப்ப இன்டர்ன்ஷிப். சவக்கிடங்கு உதவியாளர்:- கல்வித்தகுதி- பிளஸ்-2 அறிவியல் உயிரியல். வயது-17 முதல் 25. இடங்கள்-2, பாடத்தின் காலம்- ஒரு ஆண்டு. மேலும் ஒரு ஆண்டு விருப்ப இன்டர்ன்ஷிப். குடல்வாய் பாதுகாப்பு முறை:- பி.எஸ்சி நர்சிங் ஒரு ஆண்டு கிளினீக்கில் பணி செய்த அனுபவம். மொத்த இடங்கள் - 2, பாடத்தின் காலம் 3 மாதம். ரத்த சேகரிப்பு முறை:- பிளஸ்-2 (அறிவியல் உயிரியல்), வயது- 17-25, மொத்த இடங்கள் - 8, பயிற்சி காலம்- ஒரு ஆண்டு (6 மாதங்கள் பயிற்சி, 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப்). பயிலும் ஒரு வருட காலத்திற்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்கப்படும். 

நேர்காணல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் மேலும் ஓராண்டு காலம் ஜிப்மர் அவசர சிகிச்சை மையத்தில் உதவித்தொகையுடன் (மாதம் ரூ.3,713) கூடிய பயிற்சி அளிக்கப்படும். சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஜிப்மர் இணையதளத்தில் www.jipmer.edu.in பதிவிறக்கம் செய்யலாம். மேலும் ஜிப்மர் கல்விப்பிரிவு அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். அங்கு வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 30-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஜிப்மர் கல்வி நிலைய முதல்வர் அலுவலகத்தில் உள்ள 3-வது மாடியில் நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!