பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தின போட்டிகள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 19 December 2021

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தின போட்டிகள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தேசிய வாக்காளர் தினம் ஜனவரி மாதம் 25-ந்தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு ஓவியப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், பாட்டு மற்றும் நடன போட்டிகள், கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. மேலும் 18 வயது முடிவடைந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்காத மாணவ-மாணவிகள் https://www.elections.tn.gov.in/SVEEP2022/Account/Login என்ற இணையதளத்தில் நேரடியாக பங்கேற்கலாம். 

இந்த போட்டியில் 14 முதல் 17 வயது பூர்த்தி செய்த மாணவர்கள் தங்களது குடும்பத்தினரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி மேற்கண்ட இணையதளத்தின் மூலம் போட்டியில் பங்கேற்கலாம். இந்த போட்டிகள் வரும் 31-ந்தேதி வரை நடைபெறும். வெற்றி பெறுகிறவர்களின் விவரம் ஜனவரி 31-ந்தேதி மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்படும். மேற்கண்ட தகவல் அனைத்தும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment