தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண்.53550/8/இ1/2021 நாள் . 8 :11.2021
பொருள்
பள்ளிக்கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு உதவி பெறும்
பள்ளிகள் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /
மாணவியர்களுக்கு இணை சீருடைகள் வழங்குதல் மற்றும்
பயன்படுத்துதல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக,
பார்வை :
1. அரசாணை எண்.64 சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டம் (SW2) துறை
நாள்.06.09.2011.
2.Deputy Accountant General ( AMG -1 ) DO No.Prl.AG { Audit -
IYAMGI DP Cell/TNOB/AR 2020-21/73 dated 03.11.2021.
3. இவ்ணையரக ந.க.எண்.53550/8/இ1/2021 நாள் .
.11.2021
தமிழகத்தில் பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பார்வை 1 இன் காண் அரசாணையின் படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/
மாணவியர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பார்வை 2 இன் காண் கடிதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் வேலூர்
ஆகிய மாவட்டகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா
சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து வருவதில்லை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வை 3 இன் காண் செயல்முறையில் அரசு வழங்கும் விலையில்லா சீருடைகளை
பெற்றும் அவற்றை பயன்படுத்தாத அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தின் கீழ்
பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள்
தினந்தோறும் அரசு வழங்கிய சீருடைகளை அணிந்து வர அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்
அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட
முதன்மைக்கல்வி
அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment