தினம் ஒரு தகவல் வீட்டு அலமாரிகள் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 19 December 2021

தினம் ஒரு தகவல் வீட்டு அலமாரிகள்

வீட்டை அழகாகுவதில் இப்போது மரச் சாமான்களுக்கு முக்கியமான பங்குண்டு. வீட்டின் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் வீட்டை அழகுபடுத்தவும் நவீனமான தோற்றத்துக்குக் கொண்டுவரவும் மரத்திலான அலமாரிகளை அமைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. 

சமையலறை, படுக்கையறை, வாசிப்பறை, வரவேற்பறை போன்ற அறைகளில் இத்தகைய மர வேலைப்பாடுகளுடனான அலமாரிகளை அமைக்கிறோம். இந்த அலமாரிகளை அமைக்கும்போது அவசியமானவற்றை மட்டுமே அமையுங்கள். முதலில் ஆசையில் அதிக அலமாரிகளை அமைத்துவிட்டுப் பின்னர் அது பயன்பாடே இல்லாமல் வீணாக இருக்கும்படி ஆகிவிடக் கூடாது. 

ஆக, வீட்டின் மர அலமாரிகள், கப்போர்டுகள் போன்றவற்றை அமைக்கும் முன்னர் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் விவாதித்து எங்கேயெங்கே அலமாரிகள் அவசியம் என்பதை முடிவெடுத்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தீர்மானமாக முடிவுக்கு வந்த பின்னரே அலமாரிகளை அமையுங்கள். 

ஏனெனில் மர வேலைகளுடனான அலமாரிகளை அனாவசியமாக அமைப்பதால் கட்டுமானச் செலவும் அதிகரிக்கும். ஆகவே அது விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். வீடு விஷயத்தில் செலவு என்பது கட்டுக்குள் நிற்பது மிகவும் கடினம். சிறு சிறு செலவுகளாகச் சேர்ந்தே பெரும் தொகை ஆகிவிடும். நாம் பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால்கூட அந்த பட்ஜெட்டைவிட எப்படியும் பத்து சதவீதம் வரை அதிகமாகிவிடும். ஆகவே முடிந்தவரை பட்ஜெட்டுக்குள் அடங்கிவிடும். 

வீட்டின் கட்டுமானச் செலவைப் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டின் தோற்றம் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதன் நீடித்த பராமரிப்பும், நமது ஆரோக்கியமும், கட்டுக்குள் அடங்கிய கட்டுமானச் செலவும் முக்கியம். இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு நமது வீட்டை உருவாக்கும்போது அதனால் உருவாகும் சில சிக்கல்களை தவிர்த்து விடலாம்.

No comments:

Post a Comment