சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை - EDUNTZ

Latest

Search here!

Saturday, 11 December 2021

சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை 75 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. 

சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை 

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில், உரியபயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துகளில், அனைத்து ஜாதியினரும், ஜாதிவேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.95-ல் அறிவிக்கப்பட்டபடி, சைவ அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற விரும்புபவர்கள் பின்வரும் படிவத்தில் உரிய விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணியிடங்கள் விவரம் பணியிடம் தொகுப்பூதியம்(மாதம் 1-க்கு) தலைமை ஆசிரியர் ரூ. 35,000/- ஆகம ஆசிரியர் ரூ. 30,000/- தேவையானத் தகுதிகள் தலைமை ஆசிரியர் 1) தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். 2) இந்து சமய இலக்கியங்களிலும், தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும். 3) பல்கலைக் கழகம், கல்லூரி, மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து (5) ஆண்டுகள் காலம் பணியாற்றிய அனுபவம் தேவை. ஆசிரியர் - ஆகமம் 1) ஏற்கனவே நடைபெற்று வரும் வேதாகம பாடசாலைகளில் சைவ ஆகமங்களை நான்கு (4) ஆண்டுகளுக்கு குறையாமல் பயின்று, தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 

மேலும், வாழ்வியல் சடங்குகள் பற்றிய போதிய கற்றறிவும், அனுபவமும் பெற்றிருக்கவேண்டும். (குறிப்பு : ]- நீண்ட அனுபவம், கற்றறிவு, பயிற்சி உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிப்பாடுகளில் இருந்து தளர்வு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். 1 - ஏதேனும் ஒருவேதாகமப் பாடசாலையில் குறைந்தபட்சம் ஐந்து (5) ஆண்டுகள் காலம் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் அல்லது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உயர்நிலை அர்ச்சகராக குறைந்தபட்சம் (5) ஐந்து ஆண்டுகள் காலம் பணிபுரிந்த அனுபவம் ஆகியவை சிறப்புத் தகுதியாகக் கொள்ளப்படும்.) பொதுவான தகுதிகள் 1) விண்ணப்பதாரர், 01.12.2021 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். 2) விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும். 3) இந்தப் பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விரும்புகிறவர்கள் சைவசமயக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். 


குறிப்பு 1) நியமனங்கள் தேர்வுக்குழுவின் முடிவிற்குட்பட்டவை. 2) விண்ணப்பப் படிவத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் விண்ணப்பதாரர் தன் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். 3) விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் இணையத்தளம் www.maduraimeenakshi.org யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 4) விண்ணப்ப கட்டணம் கிடையாது. தக்கார் இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை செ.ம.தொ.இ./1123/வரைகலை/2021 " சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்” உ

No comments:

Post a Comment