ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் சமீபத்தில் அரசாணையாக வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது வட்டார கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 30.11.2021 நிலவரப்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளவேண்டும்.
2 ஆண்டுகள் பணி முடிக்காதவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் பங்குபெறலாம்.
* 2021-22-ம் கல்வியாண்டில் ஓய்வுபெறும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தற்போதைய ஒன்றியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும், பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் வட்டாரக்கல்வி அலுவலர்களாக நியமனம் பெற்றவர்கள் தாங்கள் கடைசியாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்த ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் தேர்வு செய்யக்கூடாது.
* அதன்படி, மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கலந்தாய்வு 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான கலந்தாய்வு 28-ந்தேதி பிற்பகலிலும், தலைமை ஆசிரியராக இருந்து வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு 29-ந்தேதி (புதன்கிழமை) காலையிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment