ஒரு காலத்தில் தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப்பூச்சுகளாகவே காணப்படும். பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப்பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும். இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. 

அடர் வண்ணங்களில் பூசுவதுதான் தற்போதைய பேஷன். ஆனால், வீடுகளில் வெள்ளைப்பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மேற்கூரைகளை அடர் வண்ணங்களில் பூசுவது வழக்கம். அடர் வண்ணங்கள் வெப்பத்தை கிரகித்துக் கொள்ளும் தன்மையுடைது. 

இதன் மூலம் வீடுகளில் உள்ள அறைகளில் வெப்பம் உயரும். கோடைகாலத்தில் மின்விசிறியை போட்டதும் உஷ்ணக்காற்று வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு இதுதான் காரணம். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம். எனவே குளிரைச் சமாளிக்க அடர் வண்ணம் பூசுவது அங்கு வாடிக்கை. ஆனால், எப்போதும் வெயில் கொளுத்தும் இந்தியாவில் உள்ள வீடுகளில் மேற்கூரைகளுக்கு அடர் வண்ணப்பூச்சு தேவையற்றது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதற்கு மாற்றாக வெள்ளைப்பூச்சு வெப்பத்தை கிரகிக்காது. வெள்ளைப்பூச்சு பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக இந்தச் சமூகத்துக்கும் நாம் பங்களிக்கிறோம். வீட்டுக்கூரைகளில் வெள்ளைப்பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் ஏராளம். புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். 

வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப்பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப்பூச்சு வெப்பத்தை ஏற்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும். வீடுகளில் மின்விசிறி, ஏ.சி. பயன்பாடு குறையும். இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும். இதெல்லாம் நேரடி பயன்கள். ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும்.

Post a Comment

Previous Post Next Post

Search here!