தமிழ் வளர்ச்சி, மற்றும் செய்தி (பொருட்காட்சிம) விழா)த்துறை. தலைமைச் செயலகம், சென்னை-600009. 


அலுவல் சார்பற்ற குறிப்பு எண் 9909 பொகா 2021 நாள் 08.092021 

பொருள்: 

அரசு விழாக்கள் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து (ம) தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்தல் - தொடர்பாக, 

பார்வை: 

1 முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர். முதலமைச்சர் அலுவலகத்தின் குறிப்பு, நாள் 30.82021 

2 திரு சி இராஜேஷ், வழக்கறிஞர் (ம) நோட்டரி பப்ளிக், கன்னியாகுமரி மாவட்டம் கடிதம் நாள்.17.82021 

பார்வையில் காணும் கடிதங்களின்மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. 2 மேற்காணும் பொருள் குறித்து, சமீபகாலமாக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவுசெய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும், இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது, உதட்டளவில் கூட பாடுவதில்லை. மேலும். எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் எந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது. 

3. எனவே, இனிவருங்காலங்களில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்குப் பதிலாக, விழாவை நடத்துவோர். இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மகேசன் காசிராஜன், 
அரசுச்செயலாளர். 

பெறுநர் 

பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009. //

ஆணைப்படி அனுப்பப்படுகிறது// 

பிரிவு அலுவலர். รโๆใน

Post a Comment

Previous Post Next Post

Search here!