மெக்கானிக்களுக்கு வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 25 December 2021

மெக்கானிக்களுக்கு வேலை

பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) மூலம் மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (பெயிண்டர்-33, மெஸ் வெயிட்டர்-12), வாகன மெக்கானிக் (293), டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (ஓ.ஜி-16) என மொத்தம் 354 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் பணிக்கு 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களும், வாகன மெக்கானிக், டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பணிகளுக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. 

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பந்தப்பட்ட பணி சார்ந்த செய்முறை தேர்வு, உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-1-2022. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை http://www.bro.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment