1975ம் ஆண்டு வரையிலான
வில்லங்கச் சான்றுகளை
ஆன்லைனில் பெறலாம்
தமிழக அரசின் வணிகவரி மற்
றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்
மூர்த்தி வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின் செயல்
பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில்
பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. தற்போது 1975ம் ஆண்டு முதல் நாளது
தேதி வரையிலான காலத்திற்கான வில்லங்கச் சான்
றுகள் விரைவுக்குறியீடு மற்றும் சார்பதிவாளரின் மின்
கையொப்பமிட்டு அலுவலகம் வராமல் ஆன்லைன்
வழி வழங்கப்பட்டு வருகிறது.
ஆவணத்தில் உள்ள
விவரத்திற்கும் வில்லங்கச்சான்றில் உள்ள விவரத்
திற்கும் ஏதேனும் மாறுபாடுகள் இருக்கும் பட்சத்தில்
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவல
கங்களுக்கு நேரில் சென்று உரிய சான்றுகளுடன்
விண்ணப்பங்களை அளிக்கும் நடைமுறை தற்போது
உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும்
சிரமமும் ஏற்படுகிறது. நேரில் சென்று விண்ணப்பம்
அளிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு
வில்லங்கச் சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்
கள் செய்ய ஆன்லைன் வழி விண்ணப்பிக்கும் புதிய
நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வில்லங்கச்சான்றில் உள்ள விவரங்களில் திருத்
தங்கள் செய்ய பதிவுத்துறையின் இணையதளத்தில்
'அட்டவணை தரவு திருத்தம்' என்பதன் வழி சென்று
ஆன்லைன் வழி விண்ணப்பிக்க பொதுமக்கள்
கோரப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் ஆன்லைன்
வழி பெறப்பட்டு சார்பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு
மாவட்டப்பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்
கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment