தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுபினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 3 ديسمبر 2021

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுபினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு 

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை 03.12.2021 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


தேர்தல் அவசியமானால், 15.12.2021 (புதன்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-ல் நடைபெறும். 16.12.2021(வியாழக்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, செ.ம.தொ.இ/1089 /வரைகலை/2021 தலைமைச் செயலகம், சென்னை-9. சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்” - 

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் 6-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 8-ந்தேதி (புதன்கிழமை) வரையும் நடைபெறுகிறது. வேட்பு மனு 9-ந்தேதி (வியாழக்கிழமை) சரிபார்க்கப்படும். வேட்பு மனுவை திரும்ப பெற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும். அதனைத்தொடர்ந்து வேட்பாளர் இறுதி பட்டியல் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படும். தேர்தல் அவசியமானால், வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகம், எண்.1, ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600001-ல் நடக்கும். தேர்தல் முடிவு 16-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق