அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ‘ராக்கிங்' எதிர்ப்பு பிரமாண பத்திரம் கொடுக்க உத்தரவு கல்லூரிகளில் ‘ராக்கிங்' செயல்களை தடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அந்த வகையில் ராக்கிங் எதிர்ப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது தொடர் பான முறையில் சில திருத்தங்களை கொண்டு வந்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும், பல்கலைக்கழக மானியக்குழுவும் சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டது. மாணவ-மாணவிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் www.antiragging.in மற்றும் www.amanmovement.org ஆகிய இணையதளத்தில் சென்று படித்து, ராக்கிங்கில் ஈடுபட மாட்டேன் என்பதை உறுதி செய்து அதில் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி, ராக்கிங் எதிர்ப்பு பிரமாண பத்திரத்தை பல்கலைக்கழக மானியக்குழு திருத்தி வழங்கிய வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்கள், டீன்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. 

 இதுதொடர்பாக கல்லூரிகள், துறைகள், விடுதிகளின் அறிவிப்பு பலகையில் சுற்றறிக்கையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒட்டி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!