ரெயில்வே தேர்வு குறித்த ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் தெற்கு ரெயில்வே எச்சரிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 7 December 2021

ரெயில்வே தேர்வு குறித்த ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

 மத்திய வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு அடிப்படையில் கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்புக்கான பல்வேறு (தொழில்துறை இல்லாத இதர) துறைகளின் பட்டதாரிகள் மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கான இடங்களுக்கு முதல் நிலை கணினி தேர்வுகள் 7 கட்டங்களாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த முதல் நிலை கணினி தேர்வுக்கான முடிவுகள் வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி வெளியிடப்படும் எனவும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான, 2-ம் நிலை கணினி தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெறும் எனவும் தற்காலிகமாக அட்டவணையிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் இந்த அட்டவணையில், நடைமுறையில் உள்ள நிபந்தனைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுதல் போன்ற காரணங்களுக்காக மாற்றப்படலாம். இந்தியன் ரெயில்வே இந்த தேர்வு சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலுக்கும் ஆர்.ஆர்.பி இணையதளத்தினை மட்டுமே பயன்படுத்துமாறும், அங்கீகரிக்கப்படாத ஆதாரங்கள் எதனையும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment