கோவில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 22 December 2021

கோவில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

கோவில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.1.2022 அன்றுடன் 35 வயது நிரம்பாதவராக இருக்கவேண்டும். இந்து சமயத்தவராகவும், பின்பற்றுபவராகவும், சைவ சமயக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவராகவும் இருக்கவேண்டும். 

 நியமனங்கள் தேர்வு குழுவின் முடிவுக்குட்பட்டவை. விண்ணப்ப படிவத்தை கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோவில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை ஆணையர், செயல் அலுவலர், அருணாசலேசுவரர் திருக்கோவில் திருவண்ணாமலை என்ற முகவரிக்கு 20.1.2022-க்குள் அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment