ஆரோக்கியம் பேரீச்சை பழத்தின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோமா...? - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 3 ديسمبر 2021

ஆரோக்கியம் பேரீச்சை பழத்தின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோமா...?

பேரீச்சை பழத்தின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோமா...? 

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் சர்க்கரை சத்து நிறைந்தது பேரீச்சை. இதை உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற் றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் அதிகம் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். 


 அதேபோல ‘வைட்டமின் ஏ’ சத்தும், பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லூடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. 

குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடற்செல்களும், உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. 

அதேபோல பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது. ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. 

 சாப்பிடும் முறை 

உலர்ந்த பேரீச்சை பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும். பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து ‘டேட்ஸ் சிரப்’ தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق