தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இதுவரை பணி வழங்கப்படாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் நிலை குறித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் குறித்தும் ஏற்கனவே தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். 

இது குறித்து துறை ரீதியாக கொண்டு செல்லப்பட்டு முதன்மை செயலாளரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி, இதை எப்படி சீர் செய்வது என்பது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரத்தை இழந்து மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். எனவே பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி தனியார் கல்வி நிறுவனங்கள் நெருக்கடி அளிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!