வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (BEO) மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் வழிகாட்டுதல்கள் வெளியிடுதல் (& விண்ணப்பப்படிவம்) தொடர்பாக - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 21 December 2021

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (BEO) மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் வழிகாட்டுதல்கள் வெளியிடுதல் (& விண்ணப்பப்படிவம்) தொடர்பாக - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண்:16932/31/2021, நாள். .12.2021 

பொருள் 

தொடக்கக் கல்வி - மாறுதல் -2021-2022 ஆம் கல்வி ஆண்டு - தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் வழிகாட்டுதல்கள் வெளியிடுதல் - தொடர்பாக 

பார்வை

1. அரசாணை (நிலை) எண்.149, பள்ளிக் கல்வி (ஜி) துறை, நாள்.28.08.2008 
2. அரசாணை (1D) எண் 218, பள்ளிக் கல்வி துறை, நாள்.20.06.2019 
3. அரசாணை (1D) எண்.393, பள்ளிக் கல்வி (பக5(1)) துறை, நாள்.04.10.2019 

2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் பணிகள் இணைப்பில் உள்ள அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இப்பொருள் சார்பான கலந்தாய்வு வழிகாட்டுதல்கள் கீழ் குறித்தவாறு வெளியிடப்படுகிறது. 

1 தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். 

2 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் பணிமுடிக்காதவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளலாம். 

3. 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டில் ஒய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

4. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வும் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறும். 

5. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமனம் பெற்றவர்கள் தாங்கள் கடைசியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்த ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் தேர்வு செய்தல் கூடாது.

6. மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் மீளவும் தேர்வு செய்யக்கூடாது. 

7. மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொண்டவர்களின் முன்னுரிமை அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். 
வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். 

தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் கலந்தாய்வுக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றியத்தில் இரண்டு ஆண்டுகள் பணிமுடிக்காதவர்கள் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 22.12.2021 க்குள் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை கையொப்பமிட்டு ஸ்கேன் (Scan) செய்து deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு : 

விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு அட்டவணை 

தொடக்கக் கல்வி இயக்குநருக்காக 

பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 









No comments:

Post a Comment