சுதந்திரத்திருநாள்
அமுதப் பெருவிழா ஸ்ரீ மதே ராமானுஜாய நம
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்
மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில்
ஸ்ரீபெரும்புதூர்-602105, காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி எண்.044-27162236
சாதிவேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும்
வைணவ பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு
மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை விளம்பரம்
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள இந்துக்களில் சாதி
வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு 2021-2022 மானியக் கோரிக்கை
அறிவிப்பு எண்.103-ல் அறிவிக்கப்பட்டபடி, வைணவ (வைகானசம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி
திருக்கோயிலில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் உரிய படிவத்தில்
விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்வதற்கான தகுதிகள்
1. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.
2. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. 01.01.2022 முதல் அன்று 14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும்
இருத்தல் வேண்டும்.
4. இந்து வைணவ கோட்பாடுகளை கடை பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
குறிப்பு
1. வைணவ பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும்.
2. பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம்,
பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும்.
3. மாணவர்களின் தேர்வு, தேர்வுக்குழுவின் முடிவுக்கு உட்பட்டது.
4. விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 20.01.2022 அன்று மாலை 5.00 மணி வரை.
5. விண்ணப்பபடிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் மற்றும்
இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் : https://hrce.tn.gov.in
6. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
செயல் அலுவலர்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில்,
ஸ்ரீபெரும்புதூர்-602 105, காஞ்சிபுரம் மாவட்டம்.
மா.வெள்ளைச்சாமி
ஆர்.சம்பத்
ஸ்ரீவாரி கே.ஸ்ரீதர்
செயல் அலுவலர்
மதசார்பு தர்மகர்த்தா மதசார்பற்ற தர்மகர்த்தா
வெ.ஆ.எண்.79/செ.ம.தொ.அ/2021 காஞ்சிபுரம், நாள்.24.12.2021 "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"
No comments:
Post a Comment