மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தெரிவாய்வுக்குழு அறிவிப்பு 


தமிழ்நாடு அரசு அரசாணை G.O.(D) எண்.238, உயர்கல்வித்துறை, நாள்: 26.10.2021- ன்படி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான மூன்று நபர்களின் பெயர்களை மாண்புமிகு தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய பேராசிரியர் E. பாலகுருசாமி, மேனாள் உறுப்பினர், இந்தியக் குடிமையியல் பணிகள் தேர்வாணையம் (UPSC), புதுதில்லி அவர்கள் தலைமையில் தெரிவாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அரசாணை G.O.(M.S.) No.187, உயர்கல்வித்துறை (K2), நாள்: 14.07.2017, அறிவிப்பிற்கிணங்கக் கல்வித் தகுதியும், பணி அனுபவமும், உயரிய தகைமைப் பண்பும் கொண்ட, நேர்மைமிக்க, பொறுப்பு வாய்ந்த, மதிப்புமிகு கல்வியாளர்களிடமிருந்து, இத்தெரிவாய்வுக்குழு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றது. துணைவேந்தராக நியமனம் பெறுபவர், மூன்றாண்டுகள் பதவி வகிப்பார். பதவிக் காலத்திற்குள் எழுபது வயதை அடைபவரானால் அப்பொழுதே பணி நிறைவு பெறுவார். 

உரிய தகுதியும், அனுபவமும் வாய்ந்த, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட PDF வடிவிலான விண்ணப்பப் படிவம் "துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்'' என்று உறை மேல் குறிப்பிடப்பட்டுப், பதிவு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக 27.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்குக் கிடைக்கப்பெறவேண்டும். கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 

Prof. J. Prakash Ph.D. Nodal Officer, Search Committee for the Selection of Vice-Chancellor of Madurai Kamaraj University, Department of Instrumentation Engineering, MIT Campus Anna University, Chromepet, Chennai-600 044. E-mail: mkuvcsc@gmail.com 

மேலும் விண்ணப்பங்கள் தெரிவாய்வுக்குழு உறுப்பினர்களுக்கு நேரடியாக அனுப்பப்படக்கூடாது. விண்ணப்பதாரர் இது தொடர்பாக நிருவாகத்தை எவ்வழியேனும் அணுகினால், அவரது விண்ணப்பம் தகுதியிழக்கும். செமதொஇ/ 1081/ வரைகலை/2021 தலைவர், துணைவேந்தர் தெரிவாய்வுக்குழு அறிவிப்பு சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம். சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!