ஆசிரியர்களான மின்வாரிய என்ஜினீயர்கள் - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 22 December 2021

ஆசிரியர்களான மின்வாரிய என்ஜினீயர்கள்

மின்சார சிக்கனத்தை வலியுறுத்தவும், பாதுகாப்பான மின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும், குறிப்பாக மாணவர்களிடம் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூத்த அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். 

 அந்தவகையில், ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அருணாச்சலம், அந்த பகுதியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களை கொண்ட மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வீதி, வீதியாக சென்று மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளையும் பொதுமக்களிடம் வழங்கினார். மின் சிக்கனம், பாதுகாப்பான மின்சார பயன்பாடு குறித்து காமராஜ்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அருணாச்சலம் வகுப்புகள் நடத்தினார். இதேபோல பட்டாபிராம் உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர், ஆவடி உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, உதவி பொறியாளர் காமராஜ், சிட்கோ திருமுல்லைவாயல் உதவி பொறியாளர் பிரவீனா ஆகியோர் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் நடத்தி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments:

Post a Comment