Excessive mobile usage affecting the future எதிர்காலத்தை பாதிக்கும் அதிகப்படியான மொபைல் பயன்பாடு - EDUNTZ

Latest

Search here!

Saturday, 25 December 2021

Excessive mobile usage affecting the future எதிர்காலத்தை பாதிக்கும் அதிகப்படியான மொபைல் பயன்பாடு

Excessive mobile usage affecting the future  எதிர்காலத்தை பாதிக்கும் அதிகப்படியான மொபைல் பயன்பாடு


கல்வி தொலைத்தொடர்பு போன்ற காரணங்களால்  மொபைல் போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேசமயம் 12 முதல் 17 வயதுடையவர்களில் சதவீத பிள்ளைகள், தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. இந்த அதீத மொபைல் போன் பயன் பாட்டால், இளம் வயதினர் பலவிதமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றுள் சில: Excessive mobile usage affecting the future 

நரம்பியல் பிரச்சினை: 

தினமும் குறைந்தபட்சம், 12 முதல் 16 மணி நேரம் வரை குறுந்தகவல் அனுப்புவதற்கும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் பயன்படுத்து கின்றனர். இவ்வாறு தொடர்ந்து மொபைலை பார்ப் பதால் கழுத்து, கை விரல்கள் மற்றும் மூட்டுப் பகுதி களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியான வலி ஏற்படும். 

கண்பார்வைக் குறைபாடு: 

மொபைல் போனில் இருந்து வெளிப்படும் கதிர் களால், கண்களின் பார்வைத்திறன் சிறிது, சிறிதாக குறையத் தொடங்கி, சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படும். 

பதற்றம், மன அழுத்தம்; 

தன்னைச்சுற்றி இருப்பவர்களிடம் பழகாமல், தொடர்ந்து மொபைல் போனை பயன்படுத்துவதால் மன அழுத்தம், பதற்ற உணர்வு போன்றவை அதிக மாகும். தற்போது இளம் வயதினரிடம் மன அழுத்தம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. Excessive mobile usage affecting the future 
 
தூக்கமின்மை: 

இரவில் நீண்ட நேரம் கண்விழித்து மொபைல் போன் பயன்படுத்துவதால், தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக சோர்வு, உடல் பருமன், ஹார் மோன் சமநிலையின்மை உட்பட பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுதவிர, இணைய வழி குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக 80 சதவீத இளைஞர்கள் பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தை இழக்க நேரிடுகிறது. மொபைல் போன் பயன்பாட்டைக் குறைத்து பயனுள்ளவற்றை நோக்கி மனதை திசை திருப்புவதற்கு சில வழிகள்: Excessive mobile usage affecting the future 

வரையறையை உருவாக்குதல்: 

அவசியமான தேவைக்கு மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துவது, இரவில் குறிப்பிட்ட நேரத் திற்குள் போனை அணைத்து விட்டு உறங்கச் செல்வது என வரையறையை உருவாக்கிக்கொண்டு, அதை செயல்முறையில் கொண்டு வர வேண்டும். 

அடிப்படை ரீசார்ஜ்: 

தற்போது, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, பல சலுகை களை அறிவிக்கின்றன. இலவசமாகக் கிடைப்பதாக நினைத்து, அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்யாமல், தேவைக்கேற்ப குறைந்த தொகைக்கு ரீசார்ஜ் செய் யுங்கள். 

பெற்றோரின் கண்காணிப்பு: 

பெற்றோர், பிள்ளைகள் யாருடன் பேசினாலும், 20 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை மட்டுமே தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும். மொபைல் போனில், பயன்படுத்தும் செயலிகள், நண்பர்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்கள் என, அனைத்தையும் கண்காணித்து, தவறு இருந்தால் நிதானமாக எடுத்துக் கூறி புரியவைப்பது நல்லது.

No comments:

Post a Comment