அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் சென்னை -28
குடிமைப் பணிகளுக்கான (IAS.,IPS., etc.,) 2022 ஆம் ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி
2022 ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான
முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination 2022) எழுதுவதற்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப்
பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வு நிலையங்கள்,
கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமிக்க
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில்
www.civilservicecoaching.com வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மூலம் அறிந்து கொள்ளலாம். மேற்படி
பயிற்சி மையங்களில் முதல்நிலைத் தேர்வுக்கு ஏற்கெனவே முழுநேரப் பயிற்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க வேண்டாம்.
அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
அ. இணையதளவழி விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்
11.12.2021 (சனிக்கிழமை)
ஆ. இணையதளவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.12. 2021 (செவ்வாய் கிழமை)
இ. தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் (கொள்குறிவகை ) | 23.01.2022 (ஞாயிற்றுக் கிழமை)
செ.ம.தொ.இ. /1124 / வரைகலை /2021 தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறை தலைவர்
"சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்.”
No comments:
Post a Comment