M.D. (Homeopathy) Graduate Student Admission 2021-2022 Academic Year எம்.டி. (ஓமியோபதி) பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2021-2022 ஆம் கல்வியாண்டு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 28 December 2021

M.D. (Homeopathy) Graduate Student Admission 2021-2022 Academic Year எம்.டி. (ஓமியோபதி) பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2021-2022 ஆம் கல்வியாண்டு

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி 7 இயக்குநரகம், சென்னை - 600 106 அறிவிக்கை 

எம்.டி. (ஓமியோபதி) பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2021-2022 ஆம் கல்வியாண்டு 

தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளான சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஓயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஓமியோபதி மருத்துவத்திற்கான AIAPGET-2021-ல்தகுதி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. 1. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in- என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சென்னை-106 


அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி இயக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் (1) ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளிலிருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய 28.12.2021 காலை 10.00 மணி தொடக்க நாள் விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய 18.01.2022 மாலை 05.00 மணி வரை கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 18.01.2022 மாலை 05.30 மணி வரை சமர்ப்பிக்க கடைசி நாள் விண்ணப்ப கட்டணம், தகுதி, மேற்கண்ட படிப்புகளுக்கான சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்கள் www.tnhealth.tn.gov.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் கிடைக்கப்பெறும். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய தகவல் தொகுப்பேட்டினை படித்து அதில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து உடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரியில் 18.01.2022 மாலை 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்கவேண்டும். தாமதமாக, கடைசி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிமுறை/ஆணை பின்பற்றப்படும். செமதொ இ/1198/வரைகலை/2021 இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை. சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம். சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்.

No comments:

Post a Comment