மனிதனைப்போலவே தாவரங்களும், பருவ காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்கின்றன. தாவரங்களைப் பொறுத்தவரை பனிக்காலம் என்பது 'இலையுதிர் காலம்' ஆகும். கடுமையான குளிருக்கு முன்பு முன் இலையுதிர் காலமும், குளிர் சற்று குறைந்து வரும் நிலையில் பின் இலையுதிர் காலமும் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் செடிகள் உறக்க நிலைக்கு சென்று விடுகிறது. 

உறக்க நிலையில் இருப்பதால் உற்பத்தி ஏதும் செய்ய முடியாது. இந்த சமயத்தில் குறைந்த அளவு நீர் பாசனம் செய்தாலே போதுமானது. பனி பொழியும் நேரத்தில், செடிகளின் மீது பனித் துளிகள் விழுவதன் காரணமாக, இலைகளில் 'கருக்கல் நோய்' ஏற்படும். இதை குணப்படுத்துவதற்கு அதிகாலையில் சூரிய ஒளி பரவும்போது செடிகளில் சிறிதளவு நீரை ஸ்பிரே செய்தால் போதுமானது. இதன் மூலம் பனிப்பொழிவால் ஏற்படும் 'பிராஸ்ட் இன்ஜுரி'யில் இருந்து செடிகளை காக்க முடியும். 

இந்த சமயத்தில் அதிக அளவு உரம் போட வேண்டிய அவசியமும் இல்லை. குளிர்காலத்தில் செடிகளில் வாடியிருக்கும் இலைகள் மற்றும் தண்டு பகுதிகளை பக்குவமாக நீக்கி விடுவதன் மூலம், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரி களால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து செடிகளை பாதுகாக்க முடியும். 

செடிகளின் அருகில் இருக்கும் வேண்டாத களைச் செடிகளை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டால் செடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல், களைச் செடிகள் ஊட்டச் சத்தினை அதிக அளவு எடுத்து வளரக் கூடிய சூழ்நிலை உருவாகும். களைச் செடிகளை மண்ணின் மேற்புறத்தில் இருந்து அகற்றும்போது கவனமாக அகற்ற வேண்டும். 

இல்லையென்றால் நாம் வளர்க்கும் செடிகளின் வேர்களில் இவை பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மண்ணின் மேல் பகுதியில் காய்ந்த இலைகள் மற்றும் சருகுகளைப் போட்டு விடுவதன் மூலம் உறை பனியால் செடிகளின் வேர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கலாம். 

குளிர்காலத்தில் தொல்லை தரும் பூச்சிகளின் நடமாட்டம் இல்லாமல் தோட்டத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லி களுக்கு பதிலாக, இயற்கை வழியில் பூச்சிகளை விரட்ட முயற்சிக்கலாம். 

குளிர்காலத்தில் தாவரங்களின் வேர் பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக் கொள்வது அவசியமானது. குளிர்காலத்தில் விளைச்சல் தரக்கூடிய தாவரங் களான முள்ளங்கி, அவரை, பீன்ஸ், பீட்ரூட், பூண்டு, முட்டைக்கோஸ், கீரை வகைகள், கேரட், பட்டாணி போன்றவற்றை பயிர் செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!