You can only succeed if you control your emotions உணர்வுகளை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறலாம்


மகிழ்ச்சி, கோபம், அழுகை, வெறுப்பு என நமக்குள் இவற்றை தேவையில்லாத இடங்களில் வெளிப்படுத்து வதன் விளைவாக நமது வெற்றி தடைபடும். எதுவாக இருந்தாலும், நிதானமாக செயல்படவும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக, இளம் வயதிலில் இருந்தே சில பயிற்சி களைக் கடைப்பிடிப்பது சிறந்தது. You can only succeed if you control your emotions

உணர்வுகளை வெளிக்காட்டாதீர்கள்: 

உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு, உடனடியாக எதிர்வினையாற்றுவது பாதிப்பையே ஏற்படுத்தும். உணர்ச்சி வசப்படும்போது, ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து, மனதை நிலைப்படுத்த வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு ஆழமாக சுவாசித்துப் பயிற்சி எடுப்பதன் மூலம், தசைகள் தளர்ந்து, இதயத் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதை உணர முடியும். 

மனதை ஒருநிலைப்படுத்துங்கள்: 

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய மான வழி, மனதை ஒருநிலைப்படுத்துவது தான். இதற்கு தியானப்பயிற்சி உதவும். ஆன்மிக வழிகளில் கவனத்தைச் செலுத்துவதும், மனதை ஒரு முகப்படுத்துவதற்கு ஏற்ற வழியாகும். வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளால் மனம் துயரப்படும்போது, அதைத் தீர்ப்பதற்கான நேர்மறை வழிகளை, கண் களை மூடி மனதுக்குள் கற்பனை செய்து பார்க்கும் போது, மனம் ஒருமுகப்படும். 

இதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் எளிதாக தீர்வு காண முடியும்.  வகையான எண்ணங்களை மாற்றுதல்: அன்றாட வாழ்வில் ஏதாவது சிக்கலை சந்திக்கும் போது, தொடர்ந்து அதைப்பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பதன் மூலம், அதில் இருக்கும் எதிர் மறை விளைவுகள் மட்டுமே புலப்படும். இந்த எண்ண ஓட்டத்தில் இருந்து மனதை திசைத்திருப்பி, பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிகளைப்பற்றி யோசிக்க வேண்டும். நகைச்சுவைக் காட்சிகளை பார்ப்பது, குழந்தைகளுடன் பேசுவது போன்ற செயல்கள் மனதை திசைத் திருப்புவதற்கு உதவும். You can only succeed if you control your emotions

விமர்சனங்களைப் புறக்கணியுங்கள்: 

நீங்கள் செய்யும் செயலுக்கு, பல விமர்சனங்கள் வெளிப்படலாம். இவை உங்கள் மனதை மகிழ்ச்சிப்படுத்தலாம் அல்லது துயரப்படுத் தலாம். எதுவாக இருந்தாலும், அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும்போதுதான், உங்களின் உணர்ச்சி இயல்பாக வெளிப்படும். ஏற்றுக்கொள்ள முடியாத விமர்சனங்களை எண்ணி கவலை கொள்ளாமல், அவற்றை புறக்கணித்து விடுவது சிறந்தது.  You can only succeed if you control your emotions

மன்னிக்கப் பழகுங்கள்: 

பிறர் மீது வெறுப்பைக் காட்டுவதை விட, மன்னிக்கப் பழகுவதே சிறந்தது. எனவே, மன்னிக்கும் பழக் கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் இருக்கும் வெறுப்பு, பொறாமை, சீற்றம் ஆகிய உணர்வு களில் இருந்து விடுபட உதவும். பிறரை மன்னிக்கும் போது, உங்கள் மனதில் இருக்கும் கடுமையான உணர்வுகளில் இருந்து விடுபடுவதை நீங்கள் உணரலாம். You can only succeed if you control your emotions

Post a Comment

Previous Post Next Post

Search here!