10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு: விடைத்தாள்களை பள்ளிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்து மதிப்பீடு கல்வித்துறை உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 9 January 2022

10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு: விடைத்தாள்களை பள்ளிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்து மதிப்பீடு கல்வித்துறை உத்தரவு

10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை பள்ளிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. 

 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் மாதத்தில் 2-ம் திருப்புதல் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை திருத்துவது தொடர்பான சில அறிவுரைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:- 

 * 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

 * விடைத்தாள்களை பரிமாற்றம் செய்யும்போது மாணவர்களின் எண்ணிக்கை, பாடம், மொழி ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 

 * ஒவ்வொரு தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை கட்டுகளாக கட்டி அன்றைய தினமே தங்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மையத்தில் ஒப்படைக்க வேண்டும். 

 * விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்கு பள்ளிகளை ஒதுக்கீடு செய்யும் போது முடிந்தவரை அதேவகை பள்ளி மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்யாத வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

 * மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை அந்த பள்ளியிலேயே வைத்திருக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். விடைத்தாள்கள் தேவைப்படும்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 

 * மதிப்பெண் விவரங்களை பள்ளி, பதிவெண், பாடம் வாரியாக பட்டியலிட்டு ஒப்படைக்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த வழிமுறை பின்னர் அறிவிக்கப்படும்.


No comments:

Post a Comment