10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியீடு. - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 12 January 2022

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியீடு.

திருப்புதல் தேர்வை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்க செயல்படும் வகையில் முதல் விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திட சிறப்பாக நடத்தி மதிப்பீடு செய்திட வேண்டும். 

1. மாணவர்களிடம் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தை போக்கிடும் வகையில் முதல் திருப்புதல் தேர்வை எவ்வித புகாருக்கும் இடமின்றி ஒரு முன்மாதிரி பொதுத் தேர்வாக நடத்தி விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்திட தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

2. முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாட்கள் அரசுத் தேர்வுத் துறையால் வடிவமைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் தேர்வுகள் நடத்தவேண்டும், 

3. முதல் திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களுக்கு தேர்வு அறை ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு தேர்வறை ஒதுக்கீடு, தேர்வுக்கு வருகை தராதோர், விடைத்தாள் கட்டுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விபரம் போன்றவை தொடர்பாக உரிய பதிவேடு பராமரிக்க வேண்டும்.

 4. தேர்வு நாளன்று காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை வட்டார அளவில் வினாத்தாள் கட்டுக் காப்பக மையத்தில் வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் காலதாமதம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

5. சுயநிதி | மெட்ரிக் பள்ளிகள் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் வினாத்தாட்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்பட்டால் துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவிக்கலாகிறது. 

6. 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஆண்டு பொதுத் தேர்வைப்போல வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு அறைகளை அமைக்கவேண்டும். 7. விடைத்தாளில் மாணவர் விவரம் பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு உரிய வழங்கவேண்டும், வரை மணி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

9. 10ஆம் வகுப்புத் தேர்வை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையும், 12-ஆம் வகுப்புத் தேர்வை மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் தேர்வு நேரம் முடியும் முன்னர் விடைத்தாட்களை பெறக்கூடாது, 

10. மாணவர்கள் நலன் கருதி மாணவர்கள் வினாத்தாளில் படித்து அதனடிப்படையில் விடையளிக்க உரிய அறிவுரை வழங்கவேண்டும். 

11. தேர்வுகால அட்டவணையை அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளிலும், அறிவிப்பு பலகைகளிலும் கண்டிப்பாக ஒட்ட வேண்டும். 


மேலும் கொரோனா நோய் தொற்று சார்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகை (SOP) பள்ளிகளில் தவறாது பின்பற்றுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

எனவே அனைத்து தலைமையாசிரியர்களும் தேர்வினை நன்முறையில் நடத்தி மாணவர்கள் கற்றல் திறன் அறிந்து அதற்கேற்ப பயிற்சியளித்து நமது மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்த பாயர்களுடன் இணைந்து பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

ஓம்//-கோ.கிருஷ்ணப்பிரியா முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம்






No comments:

Post a Comment