தமிழ்நாடு மின்சார வாரியத்தில்: 124 உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 6 January 2022

தமிழ்நாடு மின்சார வாரியத்தில்: 124 உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு



தமிழ்நாடு மின்சார வாரியத்தில்: 124 உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் உதவி பொறியாளர்கள் (எலக்டிரிக்கல்) மற்றும் இளநிலை பொறியாளர் (எலக்டிரிக்கல் கிரேடு-1) ஆகியோர் உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு அளிப்பதற்காக 482 பேர் கொண்ட பட்டியல் கடந்த 2019-ம் ஆண்டு மின்சார வாரியம் தயாரித்தது. 

அதில், முதல் கட்டமாக 228 பேருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பதவி உயர்வுக்கான பணியிடங்களும் ஒதுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது 124 பேர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, புதிய பணியிடங்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 2 வாரங்களுக்குள் புதிய பணியிடங்களில் சேர வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து பொறியாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, ‘உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு அளித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதேநேரம், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 620 பேர் கொண்ட பெயர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உடனடியாக பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். 13 முதல் 15 ஆண்டுகளை கடந்து பதவி உயர்வு இல்லாமல் வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே பதவி உயர்வுக்கு அரசு விதித்துள்ள விதிமுறைப்படி முறையாக பதவி உயர்வு அனைவருக்கும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

No comments:

Post a Comment