ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் 24-ந்தேதி தொடங்குகிறது - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 12 January 2022

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் 24-ந்தேதி தொடங்குகிறது

2021-22-ம் கல்வியாண்டுக்கான தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. அதில் வருகிற 19-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்து புதிய கலந்தாய்வு அட்டவணையை கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. 



அதன்படி, கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வருகிற 22-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் வருவாய் மாவட்டத்துக்குள் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதனையடுத்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரிவுகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 23-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment