தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்' 25-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் 

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தேசிய திறனாய்வுத் தேர்வு வருகிற 29-ந்தேதி நடைபெற இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் 19-ந்தேதி (நேற்று) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதால், வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!