பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 12 January 2022

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி

கொரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகம் எடுத்து இருக்கும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே வருகிற 20-ந்தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஊரடங்கு 31-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

விடுமுறை விடப்பட்டு இருந்தாலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது என்றும், செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக வகுப்புகள் நடத்தப்படலாம் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்பிறகு, அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப கல்லூரி நேரடி வகுப்புகள் நடத்தப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் செமஸ்டர் தேர்வுகளை பொறுத்தவரையில், ஆப்லைன் (நேரடி தேர்வு) முறையிலேயே நடத்த உயர்கல்வித்துறை முழுமூச்சில் இருந்து வருகிறது. 


தேர்வு குறித்த தேதி உள்பட அனைத்து அறிவிப்புகளும் தேர்வு நடத்துவதற்கு சில குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதுதவிர, செமஸ்டர் தேர்வுகளுக்கான விடைத்தாள் அச்சிடும் பணியை அரசு அச்சகத்திடமும், தொலைதூர படிப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணியை பாடநூல் கழகத்திடமும் ஒப்படைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment