கேரளாவில் இன்று 6 மாவட்டங்களில் பொங்கல் 'லீவ்!' Pongal 'Leave!' In 6 districts in Kerala today. - EDUNTZ

Latest

Search Here!

Friday, 14 January 2022

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களில் பொங்கல் 'லீவ்!' Pongal 'Leave!' In 6 districts in Kerala today.

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களில்


 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இன்று(ஜன.,14) அம்மாநில அரசு பொங்கல் விடுமுறை அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதம்: கடந்த 12 ஆண்டுகளாக, கேரள அரசு ஜனவரி 14ல் பொங்கல் பண்டிகைக்கான, உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது. ஜனவரி 14 புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். 

தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆறு மாவட்டங்களில், இந்த ஆண்டு ஜனவரி 15ல், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை தினமாக, ஜனவரி 14ம் நாளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதை ஏற்ற கேரள அரசு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று தை முதல் தேதி பொங்கல் அரசு விடுமுறை என அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment