அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக, மீதமுள்ள 1,163 இடங்களுக்கு தகுதியுடைய 7 ஆயிரத்து 217 பேருக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியான நிலையில், அவர்கள் அனைவருக்குமான கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது. 

முதலில் பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை தரவரிசையில் 1 முதல் 7 ஆயிரத்து 217 வரையில் இடம்பெற்றவர்கள் தங்களுக்கான பதிவை மேற்கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 


இதனை 26-ந்தேதி (புதன்கிழமை) வரை அவர்கள் மேற்கொள்ளலாம். இவர்களுக்கான முதற்கட்ட இறுதி முடிவு வருகிற 28-ந்தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து 29-ந்தேதி காலை 9 மணி முதல் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அவ்வாறு ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் வருகிற 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதிக்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு பெற்ற இடங்களில் சேர வேண்டும். மேற்கண்ட தகவல் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் பி.வசந்தாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!