‘கலா உத்சவ்' போட்டி: தமிழக பள்ளி மாணவர்கள் 7 பேர் வெற்றி - EDUNTZ

Latest

Search here!

Thursday, 20 January 2022

‘கலா உத்சவ்' போட்டி: தமிழக பள்ளி மாணவர்கள் 7 பேர் வெற்றி

அனைத்து வகை பள்ளிகளில் இடைநிலை, மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் தொடரவும் நடனம், வாய்ப்பாட்டிசை, கருவியிசை உள்பட தலைப்புகளில் ‘கலா உத்சவ்' போட்டிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான போட்டிகள் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. 


அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகளும் வெற்றி பெற்று இருக்கின்றனர். அதன்படி, நடனப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் 3-ம் இடத்தையும், மாணவிகள் பிரிவில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இசைப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் 2-ம3் இடத்தையும், பாரம்பரிய இசை போட்டியில் மாணவிகள் பிரிவில் 3-ம் இடத்தையும் தக்க வைத்துள்ளனர். 




 இதேபோல், இசைக்கருவிகள் போட்டியில் (பாரம்பரியம்) மாணவிகள் பிரிவில் 3-ம் இடமும், உள்நாட்டு பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் போட்டியில் மாணவர்கள் பிரிவில் 3-ம் இடமும், மாணவிகள் பிரிவில் 3-ம் இடமும் கிடைத்து இருக்கிறது. ஆக மொத்தம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 7 மாணவ-மாணவிகள் போட்டியில் வெற்றி பெற்று பெருமை சேர்த்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment