வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 12 January 2022

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம்

மத்திய நேரடி வரிகள் வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா காரணமாகவும், பல அறிக்கைகளை மின்னணு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து வரி செலுத்துவோர் மற்றும் இதர தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பலவிதமான தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்தது. 

 2020-2021-ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதியாக இருந்தது. பின்னர் இது அக்டோபர் 31-ந்தேதியாகவும், இந்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020-2021-ம் ஆண்டில் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் அறிக்கையை கணக்காளர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, அக்டோபர் 31-ந்தேதியாக இருந்தது. 


பின்பு இது நவம்பர் 30-ந்தேதியாகவும் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது கடைசி தேதி பிப்ரவரி 15-ந்தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி அக்டோபர் 31-ந்தேதியாக இருந்தது. பின்னர் இது நவம்பர் 30-ந்தேதியாகவும், இந்த ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சுற்றறிக்கைகளை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment