மாணவர்களுக்கு
வாட்ஸ்-அப் குழு தொடங்கி அறிவுரை வழங்க வேண்டும்
ஆதிதிராவிடர் நல கமிஷனர் உத்தரவு
ஆதிதிராவிடர் நல கமிஷனர் சோ.மதுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- Source News Click Here
கொரோனா பரவல் காரணமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்களில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காமல் இருக்கும் வகையில், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் பெற்றோர், விடுதி காப்பாளர், தனி வட்டாட்சியர்(ஆதிதிராவிடர் நலத்துறை), பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உள்ளடக்கிய வாட்ஸ்-அப் குழு ஒன்றை, தொடர்புடைய விடுதி காப்பாளர் ஆரம்பித்து, அதில் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இந்த வாட்ஸ்-அப் குழுவின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாடங்களை கற்று வருவதை உறுதி செய்யவேண்டும். பாடங்கள், தேர்வுகள் மற்றும் கொரோனா தொற்று தொடர்பாக அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு தெரிவித்து, அறிவுரைகளை வழங்கி, எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வண்ணம் செயல்பட வேண்டும் என்று தனி வட்டாட்சியர் மற்றும் காப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment