இந்தக் கால குழந்தைகளுக்கு அசாதாரண
|திறமைகள் உண்டு. அவற்றை கண்டறிந்து,
அவர்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும்.
இதன் மூலம் அவர்களை வல்லுனர்களாகவும்,
மேதைகளாகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்ற
முடியும். இளம் வயதிலேயே தொழில் செய்யும் ஆர்வம்
உள்ள குழந்தைகளுக்கு, பகுதி நேரமாக சில
தொழில்களை அறிமுகப்படுத்தலாம். அதைப் பற்றி
இங்கே தெரிந்து கொள்வோம்.
யூடியூபர்:
நமது திறமையை உலகத்திற்குக் கொண்டு
சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை
சமூக
வலைத்தளங்கள். அதில் ஒன்றுதான் யூடியூப் தளம்.
இதில் நாம் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவுக்கும்,
பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன் மூலம் வருமானமும் கிடைக்கும். திறமையை
எளிதாக அனைவருக்கும் வெளிப்படுத்தவும் முடியும்.
இளம் வயதினரின் திறமைகளை வெளிக்கொண்டு
வருவதற்கு இது சரியான வாய்ப்பாகும்.
முதியவர்களின் பராமரிப்பாளர்:
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான
வேலையாகக்கூட இருக்கலாம். வீட்டில் அல்லது
அருகில் வயதானவர்கள் யாராவது இருந்தால்,
அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளைச்
செய்யலாம். காய்கறிகள், மருந்துகள் உட்பட தேவை
யான சிறு வேலைகளைச் செய்யலாம். பல இடங்
களில், இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படு
கிறது. வெளிநாடுகளில், குழந்தைகள் இதை ஒரு
தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
கைவினைப் பொருட்கள் தயாரிப்பு:
குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் திறமையில்
ஒன்று கைவினைப் பொருட்கள் தயாரிப்பு. இதை
ஊக்குவிக்கும்போது, எதிர்காலத்தில் கற்பனைத்
திறன் அதிகரிப்பதுடன் சிறந்த தொழிலதிபராகவும்
மாற முடியும்.
[0:08 pm,
சமையல் கலை நிபுணர்:
காய்கறிகளை வெட்டுவதற்கு பழக்கலாம். கேக்,
குக்கீஸ் போன்ற உணவு வகைகளை தயாரிப்பதற்கு
கற்றுத் தரலாம். குழந்தைகள் தயாரிக்கும் இந்தப்
பொருட்களைச் சந்தையில் விற்பதன் மூலம் பணம்
ஈட்ட முடியும்.
கிப்ட் பேக்கிங்:
குழந்தைகளிடம், அவர்களின் கற்பனைத் திறனுக்
கேற்ப அழகாய் பேக்கிங் செய்யும் திறன் இருக்கும்.
அதைக் கூடுதலாக அழகுபடுத்துவதற்கு கற்றுத்தர
லாம். பூங்கொத்துகள் தயார் செய்வதற்கு பயிற்சி
தரலாம். இது குழந்தைகளுக்குப் பணம் ஈட்ட ஒரு
வாய்ப்பாகவும் அமையலாம்.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு:
குழந்தைகள் விரும்பிச் செய்யும் வேலையில் இது
வும் ஒன்று. செல்லப் பிராணிகளை நடைப்பயிற்சிக்கு
அழைத்துச் செல்வது, சுத்தம் செய்வது, உணவு
வழங்குவது என சில எளிய பராமரிப்புப் பணிகளை
வழங்கலாம். அதேபோல், செல்லப் பிராணிகளைத்
திறம்பட செயல்பட வைக்கவும் சில எளிய பயிற்சி
களை வழங்கலாம். இவற்றைக் குழந்தைகளால்,
எளிதாகப் பழக்க முடியும்.
எழுத்தாளர்:
வளரும்போதே கவிதை, கட்டுரை, சிறுகதை என
எழுதும் திறமை குழந்தைகளுக்கு உண்டு. இவற்றைச்
சரியான பாதையில் வழிநடத்திச் சென்று, கற்பனைத்
திறனை ஊக்குவிக்கும்போது எழுத்தாளராகும்
வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் குழந்தைகளுக்குச்
சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.
இவற்றையெல்லாம் குழந்தைகளின் கல்வியை
பாதிக்காமல் செயல்படுத்த முடியும். சிறு வயதி
லேயே நிர்வாகத்திறனை மேம்படுத்தவும் முடியும்.
No comments:
Post a Comment