பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 9 January 2022

பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

டிஜிட்டல் முறையில் தேர்வுமுறை உயர்கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், இணை மற்றும் துணை செயலாளர்கள், அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலாளர், நிதித்துறை இணைச் செயலாளர், ரூசா இயக்ககத்தின் திட்ட மேலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் பதிவாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், உத்தரவுகள் வருமாறு:- * தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு காகிதமில்லா தேர்வை நடத்துவதாகவும், அங்கு தேர்வுமுறை டிஜிட்டல் முறையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள் தங்கள் தேர்வுமுறையை டிஜிட்டல்மயமாக்கவேண்டும். வரும் செமஸ்டரிலேயே 20 சதவீத தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்த வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இதை சோதனை முறையில் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்துவதற்கு மட்டும் தனி ‘சர்வர்' உருவாக்கி இருக்கவேண்டும். பாடத்திட்டங்கள் 

 * பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆராய்ச்சி இருக்கையும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆராய்ச்சி இருக்கையும் அமைக்க சிண்டிகேட் ஒப்புதலைப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 * பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கணிதம், புள்ளியியல் மற்றும் தமிழ் இலக்கிய பாடத்திட்டங்களை திருத்தியபின், அதை உயர்கல்வித்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்

. * தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.), தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அளிக்கும் மதிப்பெண்ணில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள், உத்தரவுகளை முதன்மைச் செயலாளர் வெளியிட்டார்.

No comments:

Post a Comment