எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 January 2022

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

எல்லைப் பாதுகாப்புப் படையில்(பி.எஸ்.எப்) கான்ஸ்டபிள் பணி அந்தஸ்தில் காலி இடங்களை நிரப்புவதற்கு அழைப்பு வெளியாகி உள்ளது. 

சமையலர், துப்புரவு பணியாளர், தையல்காரர், தச்சர், பெயிண்டர், எலெக்ட்ரீசியன் உள்பட மொத்தம் 2788 பணி இடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. 1-8-2021 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியும், சம்பந்தப்பட்ட பணி சார்ந்த அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2022. விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை rectt.bsf.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment