தொண்டை கரகரப்பு, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் ஆரம்பக்கட்டத்திலேயே இந்த மருந்துகளை கொடுப்பது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஒரு பானில் துளசி இலைகள்,சீரகம் மற்றும் தண்ணீர் நன்றாக கொதிக்கவிடவும். பின்பு மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடிகட்டவும். இந்த தண்ணீரை கால் கப் அளவிற்கு மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல் மற்றும் தொண்டை எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யலாம்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து சுளையில் உள்ள கொட்டையை நீக்கி, நன்றாக மிக்ஸியில் அரைத்து அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனால் குழந்தைகளின் தொண்டை கரகரப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
குழந்தைகள் சளியால் அவதிப்படும் பட்சத்தில் கண்டிப்பாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே நலம்.
Search Here!
Thursday, 6 January 2022
New
சளியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சில வீட்டு வைத்திய குறிப்புகள் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment