ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 13 January 2022

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscexams.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment