கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க காலநீட்டிப்பு - EDUNTZ

Latest

Search here!

Friday, 7 January 2022

கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க காலநீட்டிப்பு

கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க காலநீட்டிப்பு 

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ்-1 முதல் பி.எச்.டி. படிப்பு வரை படிக்கும் இஸ்லாமிய, கிறித்தவ, சீக்கிய, புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 

2021-22-ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ -மாணவிகள் மேற்படி காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ -மாணவிகளிடம் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும். மாணவ- மாணவிகளின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment