முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 19 January 2022

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

செய்தி வெளியீடு. 19.01.2022 

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (19.01.2022) முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 


அது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு, முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு MD/MS மொத்த இடங்கள் 2216, அகில இந்திய ஒதுக்கீடு -1053, மாநில ஒதுக்கீடு 1163, மாநில ஒதுக்கீடுக்கான தரவரிசை பட்டியல் இன்று 19.01.2022 வெளியீடு. மாநில ஒதுக்கீடுக்கான ஆன்லைன்கலந்தாய்வு தொடங்கும் நாள் 20.01.2022. இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு 2021-2022 அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு இடங்கள் 6999. தரவரிசை பட்டியல் வெளியீடு 24.01.2022. மாற்று திறனாளிகள், ராணுவவீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி கலந்தாய்வு 27.01.2022. 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு 28.01.2022 மற்றும் 29.01.2022. மற்றப்பிரிவினர்களுக்கு 30.01.2022 முதல் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். இதை பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். 

OFFICIAL WEBSITE



வெளியீடு - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை.

No comments:

Post a Comment