எழுத்துத் தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 7 January 2022

எழுத்துத் தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

எழுத்துத் தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 இதனைத் தொடர்ந்து தேர்வாணையத்தினால் ஏற்கனவே 8 (நாளை) மற்றும் 9 (நாளை மறுதினம்)-ந்தேதிகளில் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுவதாக இருந்த தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment