தொப்பையை குறைக்க சில உணவுகளை நாம் சாப்பிடுவதின் மூலம் தொப்பையை வெகுவாக குறைக்கலாம். உடல் பருமன், தொப்பையை குறைக்க நாம் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும். தொப்பையை குறைக்க உணவு கட்டுப்பாடோடு உடற்பயிற்சியும் மிகவும் அவசியம் ஆகும். 

 உடல் பருமனை தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகள் தானாக வந்துவிடும். உடல் எடை, தொப்பை, தேவையற்ற கொழுப்பை தவிர்க்க நம் உணவு முறைகளில் சில மாற்றங்களை நம் கடைபிடிக்க வேண்டும். 

 நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும். நார்ச்சத்து மிகுந்த பழங்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தொப்பையை எளிதில் குறைக்கலாம். உதாரணமாக ஸ்ட்ரா பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. 

 உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைப்பதில் தயிர் ஒரு சிறந்த உணவாக விளங்குகிறது. தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் தேவையற்ற கொழுப்பு குறைந்து விடும். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளான பீன்ஸ். அவரைக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரைய செய்யும். கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!