கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 31-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


மாணவர்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வருகை தந்து, ஆன்லைன் வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், தங்கள் அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்தவகையில் அவர்கள் பணிக்கு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களின்றி பள்ளிகள் செயல்படுவதால் நாளை (சனிக்கிழமை) அன்று அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது' என்று கூறப்பட்டு இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!