போட்டித் தேர்வு, வேலை நேர்முகத் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி தமிழக அரசு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 7 January 2022

போட்டித் தேர்வு, வேலை நேர்முகத் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. 

 இதுபோன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். மேற்கண்ட தகவல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளது.

No comments:

Post a Comment