பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடர்பாக மீண்டும் ஒரு புகார் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 19 January 2022

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடர்பாக மீண்டும் ஒரு புகார்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடர்பாக மீண்டும் ஒரு புகார் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கு முன்பு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்ததால் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்த தேர்வு நடந்தது. 

இந்த தேர்விலும் முறைகேடுகள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு என்ற பேச்சு வந்தாலே அதில் புகார், குளறுபடிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லும் அளவுக்கு, தேர்வு முடிந்தவுடனே ஒரு புகார் காட்டுத்தீ போல் பரவியது. 

பெண் தேர்வர் ஒருவர் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளத்தில் புகார் கூறினார். ஆனால் அது உண்மைக்கு புறம்பான தகவல் என்று கண்டறியப்பட்டு, அந்த பெண் தேர்வர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதன் வினாத்தாள்களில் குளறுபடி இருப்பதாக தேர்வர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது, வேதியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் நடத்தப்பட்ட வினாத்தாள்களில் பொது அறிவு வினாக்களில் 10 வினாக்கள் ஒரே மாதிரியான வினாக்களாக உள்ளது என்பது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைக்குறிப்புகள் மூலம் தெரிய வந்திருப்பதாக தேர்வர்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment