கற்பூரவள்ளியின் இலையானது வட்ட வடிவில் பஞ்சு போன்ற தோற்றத்துடனும், தொட்டு பார்ப்பதற்கு மென்மையாகவும் காணப்படும்.
கற்பூரவள்ளி காரத்தன்மை கொண்டும் நீர்ச்சத்து அதிகம் கொண்டும் காணப்படுகிறது. இதற்கு ஓம வள்ளி என்று கூட மற்றொரு பெயர் இதற்கு உண்டு.
கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி அருந்தி வந்தால் புகை பிடிப்பதால் நுரையீரலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் மாசுக்கள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலையை சாதாரணமாக அப்படியே எடுத்து மென்று சாப்பிடலாம். இல்லையெனில் தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி இலையை கையினால் தொட்டு தடவி முகர்ந்தால், ஓமத்தின் மனம் தரும். இதன் இலையில் சுரக்கும் ஒரு விதமான ஆவியாகும் தன்மை உடைய நறுமண எண்ணெய்தான் இந்த மனத்திற்கு காரணம்.
கற்பூரவள்ளி இலைகளில் உள்ள ஒமேகா 6 என்கின்ற வேதிப்பொருளானது புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது. மேலும் மூக்கடைப்பு, மூக்கில் ஒழுகுதல், தொண்டை கட்டு இவற்றை சரி செய்ய கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து வைத்து கொள்ளவும்.
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஒரு அருமருந்தாக கற்பூரவள்ளி விளங்குகிறது.
Search Here!
Thursday, 6 January 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment