அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளி - EDUNTZ

Latest

Search Here!

Friday, 21 January 2022

அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளி

⭕⭕ஓசூர்: ஓசூர் ஒன்றியம், பேடரப்பள்ளி அரசு மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 21 ஆசிரியர்களும், 3 சிறப்பாசிரியர்களும் பணிபுரிகின்றனர். இப்பள்ளி எல்.கே.ஜி., முதல் மூன்றாம் வகுப்பு வரை ஓரிடத்திலும், 4, 5ம் வகுப்பு மற்றோர் இடத்திலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மற்றொரு இடத்திலும் இயங்குகிறது. கடந்த, 1954ல், 60 மாணவர்களுடன் துவங்கியது. 

 ⭕⭕கடந்த கல்வி ஆண்டில் இப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 700 ஆக இருந்தது. இந்த கல்வி ஆண்டில் மட்டும், 393 மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதில் பலர் அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். தற்போது இப்பள்ளி மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, 1,093 ஆக உள்ளது. ஓசூர் கல்வி மாவட்டத்தில், அதிக மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளிகளில் ஒன்றாக இப்பள்ளி திகழ்வது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment